ARTICLE AD BOX
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி, துபாயில் நடைபெற்றது.
தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் முக்கியமான மேட்ச் நடக்கும் நாள்களில் பயணம் செய்து மைதானங்களுக்குச் சென்று போட்டியைக் காண்பர்கள். அப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் ஜீவாவும் சென்றிருந்தார்கள். அதுபோல இன்றைய இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியை துபாய் சர்வதேச மைதானத்தில் கண்டுகளித்திருக்கிறார் நடிகர் சிம்பு.
Simbu at Dubaiசமீபத்தில் நடிகர் சிம்பு துபாயில் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகின. ஆனால், அங்கு படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. இதனை தொடர்ந்து துபாயிலிருந்த சிம்பு தற்போது இந்த அரையிறுதிப் போட்டியைக் காண துபாய் மைதானத்திற்குச் சென்றிருக்கிறார்.
சிம்புவின் 49-வது படத்தை `பார்கிங்' பட இயக்குநர் ராம்குமார் இயக்கவிருக்கிறார். 50-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார். 51-வது படத்தை `டிராகன்' அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார்.IndvAus : 'திரில் கொடுத்த ஆஸ்திரேலியா; மாஸ்டர் க்ளாஸ் கோலி!' - இறுதிப்போட்டியில் இந்தியா!
9 months ago
8







English (US) ·