ARTICLE AD BOX
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் 'டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்திற்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்த விருந்தில் நடிகை த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி மற்றும் ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
Suriya - Jyothika Lunch Partyஇங்கு இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கு ஜோதிகா தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து அவர்களைப் பற்றியும், அவர்களை சந்திப்பதைக் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் த்ரிஷாவுடன் முன்பு எடுத்த புகைப்படத்தையும் இப்போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்,''நேரம் பறந்து கொண்டிருக்கிறது. அது உங்களை உயரத்திற்குக் கூட்டிச்செல்கிறது." என குறிப்பிட்டிருக்கிறார்.
Suriya - Jyothika Lunch Partyநடன இயக்குநர் பிருந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து , '' இந்தப் பெண் அவரின் விரல்களால் எங்களை நடனமாட வைத்தவர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இறுதியாக தன் நண்பர்கள் அனைவருடனும் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ''இதைதான் நான் தெரபி என்று அழைப்பேன்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

8 months ago
8






English (US) ·