Kamal: ``எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தது இவைதான்; என்னை மாற்றியது மலையாள சினிமாதான்'' -நடிகர் கமல்

7 months ago 8
ARTICLE AD BOX

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' வருகிற ஜூன் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட திரைப்பட்டாளங்களின் நடிப்பு என இப்படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் வெளியீட்டையொட்டி படக்குழு புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அவ்வகையில் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில் தனது சினிமா அனுபவம் குறித்துப் பல விஷியங்களைப் பேசியிருக்கிறார்,

Thug Life

இதில் மலையாள சினிமா குறித்துப் பேசியிருக்கும் கமல், "என்னோட ஆரம்ப காலங்களில் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ஒரே மாதிரி, எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறோம் என்கிற சலிப்பான மனநிலை இருந்தது.

சரி, நிறையக் கற்றுக் கொள்ளலாம் என்று மலையாளம் சினிமாவிற்குச் சென்றேன். அங்கு சினிமா குறித்த எனது பார்வை, நடிப்பு எல்லாமும் மாறியது. அது எனக்கு ஒரு நல்ல பயிற்சிக் காலமாக இருந்தது. என்னுடைய குருநாதர் இயக்குநர் பாலச்சந்தர், மலையாளம் சினிமா இரண்டும்தான் எனக்கு சினிமாவைக் கற்றுக் கொடுத்தது. இன்று இருப்பவர்கள் எப்படி கூகுளில் கேட்டறிந்து கற்றுக் கொள்கிறார்களோ, நான் அப்படி பாலச்சந்தர், மலையாளம் இரண்டிலிருந்தும் கற்றுக் கொண்டேன்.

நடிகர் கமல்

மலையாள நடிகருடன் பணிபுரிந்தது எனது அணுகுமுறையை மாற்றியது, ஏனென்றால் மலையாளத்தில் பல யூசுப் சஹாப் (திலீப் குமார்) இருப்பதைக் கண்டேன்." என்று பேசியிருக்கிறார்.

Kamal Haasan: `` 21 வயதில் தோன்றிய எண்ணம்; வழி நடத்திய குரு அனந்து "- கமல் சொன்ன ப்ளாஷ்பேக்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article