Kayadu Lohar: `தவறான விஷயங்களைப் பரப்ப வேண்டாம்...'- விமர்சனத்திற்கு பதிலளித்த கயடு லோஹர்

9 months ago 12
ARTICLE AD BOX

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருக்கிறார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே அவர் தனக்கு தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரோமோட் செய்துகொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர்.
கயடு லோஹர்

அந்தவகையில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரதீப் ரங்கநாதனும், கயடு லோஹரும் பேட்டி அளித்தனர். அங்கு அவர்களுக்கு ஃபோனை பரிமாற்றிக் கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது பிரதீப் கயடுவின் போனில் 'கயடு லோஹர் தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை 'என்று மீம் கிரியேட் செய்திருப்பதை பார்த்து சிரித்தார். மேலும் உங்களுக்கு நீங்களே மீம் கிரியேட் செய்துகொள்வீர்களா? என்று கேட்டு கிண்டலும் செய்திருந்தார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் தனக்கு தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரொமோட் செய்துகொள்கிறார் கயடு லோஹர் என்ற விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கயடு லோஹர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " நாங்கள் அளித்த பேட்டி தொடர்பான விமர்சன வீடியோக்களை இணையத்தில் பார்க்கிறேன்.

கயடு லோஹர் - பிரதீப்

அந்தப் பேட்டியில் நீங்கள் பார்த்த அனைத்தும் நகைச்சுவைக்காக செய்தவை. அந்த நேர்காணலை சுவாரசியமாக்குவதற்காக நானும் பிரதீப்பும் முன்பே அதைப் பற்றி பேசிக்கொண்டோம். உங்கள் அனைவரையும் சிரிக்க வைப்பதே குறிக்கோளாக இருந்தது. நெகட்டிவான விஷயங்களைப் பரப்ப வேண்டாம். என்னை ஆதரித்தவர்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் எப்போதும் நன்றி" என்று தெரிவிதிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article