ARTICLE AD BOX
இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் 'பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்' இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.
கிங்ஸ்டன்இவ்விழாவில் பேசியிருக்கும் 'டிராகன்' பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, "இந்த 'கிங்ஸ்டன்' பட செட்டுக்குள்ள போகும்போது 'பாகுபலி' செட்டுக்குள்ள போன மாதிரி இருந்தது. அந்த அளவிற்கு பிரமாண்டமாக இருந்தது. என் நண்பன் இயக்குநர் கமல் பிரகாஷ் இவ்வளவு பெரிய படம் பண்றானானு வியப்பா இருந்துச்சு. ஜி.வி சார் கமல் பிரகாஷுக்கு ரொம்ப ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில இருந்து நான் ஜி.வி சாரோட நடிப்புக்கு ரசிகனாகிட்டேன்" என்று பேசியிருக்கிறார்.

9 months ago
10







English (US) ·