ARTICLE AD BOX
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது.
டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய விடிவி கணேஷ், ``இந்தப் படத்தின் இயக்குநர் சதீஷ் ரொம்ப ஹைபரானவர். தூக்கத்துல கூட சேட்டை பண்ணக்கூடியவர் போல.
மாஸ்டர் ராஜசுந்தரம் கூட `இவன் கொஞ்சம் வித்தியாசமான பையன்'னு சொல்லிருக்கார். துருதுருனு எதையாவது பண்ணிட்டே இருப்பான்.
Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது" - நெகிழும் சதிஷ்தளபதி விஜய்க்கு இவனை ரொம்ப புடிக்கும். இவன் வந்ததும் செட்டே கலகலனு இருக்கும். பீஸ்ட் படத்துல நானும் சதீஷும் நடித்திருந்தபோது, இவனைப் பார்த்து 'தூ' சொல்ற மாதிரியான சீன்.
அது தெலுங்கு ஆடியன்ஸ்கு ரொம்ப புடிச்சிருச்சு. அதனால என்னைத் தலைல தூக்கிவச்சிக் கொண்டாடுறாங்க. என்னுடைய முதல் கிஸ் அனுபவம் பத்தி கவின் கேட்டதால சொல்றேன்.
எனக்கு அப்போ 21 வயசு இருக்கும். நானும் என் ஃப்ரண்டும் வாரதுக்கு ஒருமுறை சரக்கடிக்க மகாபலிபுரம் போயிடுவோம்.
அப்படி ஒருமுறை போயிருந்தப்போ, பிரெஞ்ச் கேள்ஸ் இரண்டுபேர் வந்திருந்தாங்க. பிரெஞ்ச் சொன்னதும் எனக்கு பிரெஞ்ச் கிஸ்தான் ஞாபகம் வந்துச்சு.
அதனால் அவங்ககிட்ட அடிவாங்கினாலும் பரவாயில்லை, பிரெஞ்ச் கிஸ்னா என்னனு தெரிஞ்சிக்கணும்னு கேட்டேன். அவங்க ஒரு மாதிரியா பார்த்துட்டு, சரி எங்ககூட வந்து குளி சொல்றோம்னு கடலுக்குக் கூப்பிட்டு போனாங்க.
நானும் என் ப்ரெண்ட் கிட்ட குளிச்சிட்டு வரேனு சொல்லிட்டு அவங்ககூட போனேன். எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் பிரெஞ்ச் கிஸ் பத்தி தெரிஞ்சே ஆகணும்னு தண்ணிக்குள்ள இறங்கி, அவங்ககூடவே போனேன்.
Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Albumநெஞ்சு வரைக்கும் தண்ணி இருக்கும். இதுக்குமேல போகக்கூடாதுனு முடிவு பண்ணி, அவங்ககிட்ட, இதுக்குமேல என்னால வர முடியாது.
இங்கேயே சொல்றதா இருந்தா சொல்லுங்க. இல்லைனா நான் திரும்பி போயிடுறேன்னு சொன்னேன்.
உடனே அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு, அதுல ஒரு பொண்ணு எனக்கு கிஸ் பண்ணுச்சு. அதுதான் என் முதல் கிஸ். அதுல அப்படியே மயங்கி தண்ணிக்குள்ள போயிட்டேன்.
நிறைய தண்ணிய குடிச்சி, என் ஃப்ரெண்ட் வந்து என்னைக் காப்பாத்துனான். இதுதான் என் முதல் அனுபவம்.
மிர்ச்சி விஜய் இருக்கானே... வாலு நம்பர் ஒன்னு சார். சும்மாவே இருக்கமாட்டான். வாலு மட்டும்தான் இல்லை. ஆனா நல்ல நடிகன். அவன் நல்ல நடிகனா வருவான்.
எனக்கு செலிபிரட்டி கிர்ஷ்னு யாரும் இல்லை. அப்படி இருக்கிறதும் எனக்குப் பிடிக்காது. அவங்க காட்டுற கெத்துலாம் எனக்கு செட் ஆகாது" என்று பேசினார்.
Kiss: "சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன்" - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானிசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
3 months ago
5





English (US) ·