KPY Bala: ``எவ்வளவு வன்மம்; என்னை சர்வதேச கைகூலின்னு சொல்றாங்க!" - KPY பாலா காட்டம்!

3 months ago 5
ARTICLE AD BOX

KPY பாலா குறித்தான பேச்சுதான் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது. சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்த ̀காந்தி கண்ணாடி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.

Gandhi Kannadi - KPY BalaGandhi Kannadi - KPY Bala

அதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களாக அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் பரப்பப்பட்டு பல விஷயங்கள் பேசப்பட்டு வந்தது. அப்படியான விஷயங்களை அனைத்தையும் எதிர்த்துப் பேசி, தன்னுடைய பக்கத்தை விளக்கிக்க் கூறி பாலா காணொளி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் KPY பாலா, "பாலா எக்ஸ்போஸ்ட் ஆகிட்டான். பாலா ஒரு சர்வதேச கைகூலி. இவன் ஒரு ஸ்கேம்னு சொல்றாங்க. எவ்வளவு வன்மம் என் மேல. நானும் இந்த விஷயம், இப்போ முடியும், அப்போ முடியும்னு நினைச்சுட்டு இருந்தேன். நான் ஒரே ஒரு படம் நடிச்சேன்.

அந்தப் படத்துக்குப் பிறகு இவ்வளவு விஷயங்கள் பண்ணுவாங்கனு எனக்கு சத்தியமா தெரியாது. ஆம்புலன்ஸில் நம்பர் ப்ளேட்டில் ஒரு D இல்லை என எவ்வளவு பிரச்னை.

இந்த ஆம்புலன்ஸ் மூலமாக பலருக்கும் உதவி கிடைச்சிருக்கு. இந்த ஆம்புலன்ஸ் மூலமாக எத்தனை பேரு உயிர் பிழைச்சிருக்காங்கங்கிற விஷயமெல்லாம் போடமாட்டேங்குறாங்க.

Gandhi Kannadi - KPY BalaGandhi Kannadi - KPY Bala

பாசிடிவ் விஷயங்கள் எதையும் போட மாட்டேங்குறாங்க. சின்னதாக ஸ்டிக்கர்ல ஒரு பிரச்னை வந்து என்னை பத்தி என்னென்னமோ சொல்ல தொடங்கிட்டாங்க. அதிலும் ஒருவர் நான் சர்வதேச கைகூலின்னு சொல்றாரு.

ஐயா, நான் தினக்கூலி! இவனுக்கு எப்படி இவ்வளவு பணம். இவனுக்கு வெளிநாட்டுல இருந்து பணம் கொடுக்கிறாங்கனு சொல்றாங்க. நான் ஆங்கரிங் பண்றேன், வெளிநாடுகள்ல நடக்கிற ஈவெண்ட்கள்ல இரவு பகல்னு பார்க்காமல் உழைக்கிறேன்.

என்கிட்ட அறக்கட்டளை எதுவும் கிடையாது. நான் க்ரவுட் பண்டிங்காக எதுவும் செய்யுறது கிடையாது. பலரும் உனக்குனு வீடு, கார் வாங்கியிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காதுனு சொல்றாங்க.

இவனுக்கு எப்படி மருத்துவமனை கட்டுற அளவுக்கு பணம் வந்ததுனு நிறைய விஷயங்கள் தொடர்ந்து பேசுறீங்க. என்கிட்ட வீடு கட்டுறதுக்கு கொஞ்சம் இடம் இருந்தது. இன்னும் கொஞ்ச இடத்தை அமுதவாணன் அண்ணன்கிட்ட இருந்து வாங்கிதான் அந்த மருத்துவமனையைக் கட்டுறேன்.

என்னுடைய பெயரை மக்கள்கிட்ட கலங்கடிக்கணும்னு இவ்வளவு விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. இப்படிலாம் பண்ணினால் பாலாவுக்கு வர்ற மாதிரியான பிரச்னைகள் வந்திடும்னு உதவி செய்யுற பலர் பின் வாங்கிடக் கூடாதுனுதான் இந்த வீடியோவை போடுறேன்.

உதவி செய்யுறதை வீடியோ எடுத்துப் போட்டு நான் சம்பாதிக்கிறேன்னு சொல்றாங்க. என்கிட்ட யூட்யூப் சேனல் கிடையாது. நான் அதை இன்ஸ்டாவிலதான் போடுவேன்.

என்னைப் பத்தி தப்பா பேசி வீடியோ போட்டு நீங்கதான் சம்பாதிக்கிறீங்க. நான் இதெல்லாம் பார்த்து ஓடிட மாட்டேன். எனக்காக மக்கள் இருக்காங்க. அவங்களுக்காக தொடர்ந்து ஓடுவேன்!" என்கிறார்.

Read Entire Article