Manikandan: `நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..!’ - மணிகண்டன் குறித்து நெகிழும் குடும்பஸ்தன் நடிகை சான்வே

8 months ago 8
ARTICLE AD BOX

ஜெய்பீம், குட் நைட், லவ்வர் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் நடிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குடும்பஸ்தன்'. இந்த ஆண்டு வெளியான சிறந்த குடும்பப் படம் எனக் கொண்டாடும் அளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் நடிகை சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு.

வெண்ணிலா

வெண்ணிலா கதாபாத்திரத்திற்கு அவரது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சான்வி மேக்னாவுக்கு தொடர்ந்து குடும்ப படங்கலில் சான்ஸ் கிடைக்கிறதாம்

ஒரு அற்புதமான நண்பரை...

ஆனால் அவருக்கு எல்லா விதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டுமாம் குறிப்பாக ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று சான்வே மேகன்னா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மணிகண்டனுடனான புகைப்படங்களைப் பகிர்ந்து, ``எண்ணிக்கையில்லா உரையாடலகள், கணக்கிலடங்கா இரவு நேர உரையாடல்கள், 24/7 காமெடி, சிரிப்பு, தெலுங்கு தமிழ் இங்கிலிஷ் கலந்து நிகழும் கற்றல்கள் என உங்களைப் போன்ற சிறந்த நடிகருடன் பணிபுரிவது மிகவும் அழகாக இருக்கிறது.

உங்களிடம் ஒரு சிறந்த சக நடிகரை மட்டுமல்ல, ஒரு அற்புதமான நண்பரையும் கண்டுபிடித்திருக்கிறேன். அதனால் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்!!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``மக்களிடமிருந்து பெறும் அன்பை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை'' - மணிகண்டன் உருக்கம்
Read Entire Article