ARTICLE AD BOX
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!அவருடைய மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கடைசியில் தலைவருமான கமல்ஹாசன், எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் பதிவில், "நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்…

9 months ago
8






English (US) ·