ARTICLE AD BOX
இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா தனது 48 வயதில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
நடிகராகவும் இயக்குநராகவும் திரையுலகுக்குப் பங்களிப்பைச் செலுத்திய அவரது எதிர்பாராத இழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், "நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
Manoj Bharathiraja: பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்
manoj bharathirajaதனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

9 months ago
8






English (US) ·