Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை

9 months ago 8
ARTICLE AD BOX

புகழ்பெற்ற இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) மறைந்துள்ள செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். 

மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு முதல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனோஜ் பாரதிராஜா

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பில் , "இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

மனோஜ் பாரதிராஜா

பாரதிராஜா இயக்கிய `தாஜ் மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அப்படத்திற்குப் பிறகு `சமுத்திரம்' திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரிச்சயமான அவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் கடைசியாக கடந்தாண்டு வெளியான `ஸ்நேக் அன்ட் லாடர்ஸ்' வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

உதவி இயக்குநராக அனுபவம் கொண்ட இவர் `மார்கழி திங்கள்' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் பரிச்சயமானார். இவருக்கும் நடிகை நந்தனாவுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இன்று மாலை (25.03.2025) மனோஜ் பாரதிராஜா காலமாகியிருக்கிறார். 

Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்கும் இளையராஜா
Read Entire Article