ARTICLE AD BOX
ரவி தேஜா நடித்திருக்கும் `மாஸ் ஜதாரா' திரைப்படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது ரவி தேஜாவின் 75-வது திரைப்படம்.
`தமாகா' படத்தைத் தொடர்ந்து இந்த மாஸ் மசாலா தெலுங்கு படத்தில் ஶ்ரீலீலாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் ரவி தேஜா.
Suriya - Mass Jatharaஇப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.
`ஈகிள்', `மிஸ்டர் பச்சன்' என ரவி தேஜா நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை. அது குறித்தும் இந்த நிகழ்வில் ரவி தேஜா பேசியிருக்கிறார்.
``மாஸ் ஜதாரா' படத்தில் நான் மிகவும் ஸ்டைலிஷாக காட்டப்பட்டிருக்கிறேன். இன்றுதான் நான் முழு படத்தையும் பார்த்தேன். படத்தின் பின்னணி இசை அற்புதமாக வந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விதுவின் விஷுவல்கள் அனைவரையும் கவரும். நவீன் சந்திராவின் சிவுடு என்ற கேரக்டர் உங்களை சப்ரைஸ் செய்யும்.
ராஜேந்திர பிரசாத்தின் கதாபாத்திரத்தில் தீவிரமும் என்டர்டெயின்மென்ட்டும் இருக்கும்.
Ravi Teja - Mass Jatharaஇந்தப் படத்திலும் ஶ்ரீலீலாவுடனான என் காம்பினேஷன் மீண்டும் சூப்பர் ஹிட் அடிக்கும். இந்த படத்தில் அவரின் புதிய தோற்றத்தை பார்ப்பீர்கள்.
என் அன்பு சகோதரர்களே! சமீபகாலமாக நான் உங்களை எல்லாம் எரிச்சல் அடையச் செய்திருக்கிறேன் என தெரியும். ஆனால் 'மாஸ் ஜதாரா' படத்தில் அது நடக்காது. இது என் சத்தியம்!" எனக் கூறியிருக்கிறார்.

1 month ago
3






English (US) ·