ARTICLE AD BOX
69-வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தொடங்கி தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Nadigar Sangam Genral Body Meetingசமீபத்தில் மறைந்த திரைக் கலைஞர்களுக்கு இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கப் பொறுப்பாளர்கள் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினர்.
நடிகர் கார்த்தியிடம் செய்தியாளர் ஒருவர், "கட்டடத்திற்காக வாங்கியிருக்கும் கடனை எப்போது அடைக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தந்த கார்த்தி, "வங்கி 10 வருடம் வரை கால அவகாசம் தந்திருக்கிறது.
இப்போதே எங்களுக்கு சங்கத்திலிருந்து வருமானம் வரத் தொடங்கிவிட்டது. அடுத்தடுத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்.
இனி அனைத்து ஆடியோ நிகழ்வுகளும் நடிகர் சங்கத்தில்தான் நடைபெறும் என விஷால் உறுதியளித்திருக்கிறார். இப்படி வருமானங்களே அந்தக் கடனை அடைப்பதற்கு வழியை அமைத்துக்கொடுக்கும்." என்றதும் நடிகர் நாசர், "அடுத்த நிர்வாகத்திற்கு இந்த கடன் சுமையாக மாறாமல், இந்த கட்டடமே அந்தப் பணத்தை ஈட்டித் தரும்." என்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால், "தடை அத்தனைக்கும் ஒரு காரணம் இருக்கும். அந்த தடைகளைத் தாண்டி வெற்றியை நோக்கி செல்வதுதான் உண்மையான வெற்றி.
எங்களுடைய மனம் சுத்தமாக இருக்கிறது. நாங்கள் தடையைத் தாண்டி வருகிறோம். கட்டடத்திற்கு 7 வருடம் எனச் சொல்கிறார்கள்.
அதற்குள் சென்றால் நீங்கள் வாயைப் பிளந்து பார்ப்பீர்கள். தமிழ்நாட்டின் அடையாளமாகவும் அது இருக்கும்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·