Nayanthara: மூன்றாவது முறையாக சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தாரா - வெளியான அப்டேட்

7 months ago 8
ARTICLE AD BOX

டோலிவுட் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்த 'சங்கராந்தி வஸ்துனம்' திரைப்படம் அதிரடி என்டர்டெயினராக ஹிட் அடித்திருந்தது. அப்படத்தில் வெங்கடேஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

ChiranjeeviChiranjeevi

அத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவியின் படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார் அனில் ரவிபுடி. இப்படத்திற்கான படப்பிடிப்பை விரைவாக முடித்து அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது சிரஞ்சீவியின் 157-வது திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நயன்தாரா கமிட்டாகியிருக்கிறார். நயன்தாரா படத்தில் நடிக்கும் தகவலை ஒரு நகைச்சுவையான புரொமோ வீடியோ மூலமாக அறிவித்திருக்கிறார்கள்.

அந்தக் காணொளியில், நயன்தாரா சிரஞ்சீவியின் ஹிட் பாடல்களுக்கு வைப்ஸ் செய்வது போலவும், சிரஞ்சீவியின் ஐகானிக் வசனத்தைப் பேசுவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

சிரஞ்சீவியுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இதற்கு முன், 'சைரா நரசிம்ஹா ரெட்டி', 'காட்பாதர்' ஆகிய திரைப்படங்களில் நயன்தாரா நடித்திருந்தார்.

சிரஞ்சீவி நடித்திருக்கும் 'விஸ்வம்பரா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதை தாண்டி அவர் 'தசரா' படத்தின் இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Read Entire Article