Pahalgam Attack: "மத வெறுப்பாகத் திசைதிருப்பாதீர்கள்" - ஆண்ட்ரியா வேண்டுகோள்

8 months ago 8
ARTICLE AD BOX

காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், நேற்று (ஏப்ரல் 22) அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர்.

தீவிரவாதிகளின் இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Pahalgam AttackPahalgam Attack

இதுகுறித்து நடிகையும், பாடகருமான ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பஹல்காமிற்கு நானும் சுற்றுலாப் பயணியாகச் சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது.

அதே போல இந்த நிகழ்விற்குப் பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது.

நமது நாடு (மதரீதியாக) அதிகம் பிரித்து அணிதிரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகத்திற்கு எதிரான வெறுப்பாகத் திசைதிருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை.

நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல. ஆனால் இந்த சூழலில் இதைச் சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை. எனது பதிவின் பின்னோட்ட பகுதியிலும் இல்லை. நம் உலகிலும் இல்லை" என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

Pahalgam Attack: ``எங்களுக்கு தொடர்பில்லை, இந்திய அரசுதான் காரணம்..'' - பாகிஸ்தான் அமைச்சர்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Read Entire Article