Rajini: ``ஒரு இரவுக்கு 20,000 ரூபாயா? டிக்கெட்டையே கேன்சல் பண்ணிட்டாரு" - ரஜினி குறித்து அனிருத்

7 months ago 8
ARTICLE AD BOX

இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய திரைத்துறை அனுபவம் பற்றியும் இசையமைப்புப் பணிகள் பற்றியும் பேசியிருக்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் அனிருத் பகிர்ந்திருக்கிறார்.

அனிருத்அனிருத்

ரஜினிகாந்த் குறித்துப் பேசியிருக்கும் அனிருத், "பொதுவாக ஹீரோக்களாக இருப்பவர்கள் நல்ல வசதியான சௌகரியமான Suite ரூம்களில் தங்குவதைத்தான் விரும்புவார்கள். ஆனால், ரஜினிகாந்த் அப்படியில்லை.

நான் ஒரு உதாரணமே சொல்கிறேன். ஒரு முறை அவர் லண்டனுக்கு செல்ல வேண்டும். அங்கே அவருக்கு புக் செய்யப்பட்டிருந்த அறைக்கு ஒரு இரவுக்கு 20,000 ரூபாய் கட்டணம். ஒரு இரவுக்கு அவ்வளவு கட்டணமா என சொல்லி லண்டனுக்கு செல்லும் விமான டிக்கெட்டையே கேன்சல் செய்யச் சொல்லிவிட்டார்.

அனிரூத்- ரஜினிஅனிரூத்- ரஜினி

நான் சிறுவயதிலிருந்து இப்படியான விஷயங்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அதிகமாக செலவளிக்க வேண்டுமென்றாலே ஒரு மாதிரியாக இருக்கும்"என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article