ARTICLE AD BOX
நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரபரப்பாக வலம் வந்தவர் கடந்த 2010-ம் ஆண்டு இந்திரக்குமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகி சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக மட்டும் பங்கேற்று வந்தார்.

அதன் பிறகு ரியாலிட்டி ஷோக்களிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டார் ரம்பா. 8 வருட இடைவெளிக்குப் பிறகு `ஜோடி ஆர் யூ ரெடி' என்ற விஜய் டி.வி நடன நிகழ்ச்சியின் மூலம் நடுவராக கம்பேக் கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனிலும் நடுவர்களில் ஒருவராக ரம்பா தொடர்ந்திருக்கிறார்.
`ரஞ்சனி' சீரியல் சந்தோஷ், `லப்பர் பந்து' பட நடிகை மெளனிகா - புதுமணத் தம்பதியின் க்யூட் புகைப்படங்கள்தொலைக்காட்சிகளில் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தாலும் அவரின் வெள்ளித்திரை கம்பேக்கிற்காகவே பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ரம்பா மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரிக் கொடுப்பது பற்றி சமீபத்திய பேட்டியிலும் அவர் தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர், `` திரைப்படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். திரைப்படங்கள்தான் எனக்கு வாழ்க்கைக் கொடுத்தது. எதாவது முக்கியமான அல்லது நல்ல விஷயங்கள் அமைந்தால்'' நிச்சயமாக நடிப்பேன் என தெரிவித்திருந்தார்.
இப்படியான விஷயங்களுக்குப் பிறகு மீண்டும் ரம்பா சினிமாவில் கம்பேக் கொடுக்கவிருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

தற்போது மக்கள் தொடர்பாளர் ரியாஸும் ரம்பா கம்பேக் கொடுக்கவிருப்பது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ``வெள்ளித்திரையில் கம்பேக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார் ரம்பா. பன்முகத்தன்மை நடிப்பு திறன் கொண்ட ரம்பா தற்போது நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் புதிய கோணங்களில் அணுகுவதற்கும், மக்களிடம் அர்த்தமுள்ள வகையில் அவர் கனெக்ட்டாகவும் வழிவகுக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Actor #Rambha is all set for a Stunning Silver Screen Comeback. The versatile performer is now looking forward to performance-driven characters that would allow her to explore new dimensions and connect with audiences in a meaningful way. @rambhaindran_@V4UTALENTS… pic.twitter.com/3qtRJhtUWZ
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 27, 2025Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
10






English (US) ·