Ravi Mohan: ரவி மோகனின் ஈ.சி.ஆர் இல்லத்திற்கு நோட்டீஸ்! - காரணம் இதுதான்!

3 months ago 4
ARTICLE AD BOX

தவணைத் தொகை செலுத்தாத காரணத்தினால் சென்னை ஈஞ்சம்பாக்கத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நடிகர் ரவி மோகனின் வீட்டிற்கு தனியார் வங்கி அதிகாரி இன்று (24.09.25) நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்.

Ravi MohanRavi Mohan

நடிகர் ரவி மோகன் சமீபத்தில்தான் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டச் கோல்ட் யுனிவர்ஸ் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், தங்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ரவி மோகன் மற்ற நிறுவனங்களின் படங்களில் நடித்து வருகிறார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள ரவி மோகனின் இல்லத்தை ஜப்தி செய்து, அதன் வழியாக அவர்களுடைய அட்வான்ஸ் தொகையைப் பெறுவதற்கு கோரிக்கை விடுத்திருந்தது.

Ravi MohanRavi Mohan

இந்தச் சமயத்தில்தான், ரவி மோகன் அந்த வீட்டிற்கான கடன் தவணைத் தொகையைக் கட்டாமல் இருந்திருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 90 நாள்களுக்கும் மேலாக வங்கி வாங்கிய பணத்திற்கான அசல் மற்றும் வட்டித் தொகையைச் செலுத்தாத காரணத்தினால் அவருடைய வீட்டில் வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள்.

Read Entire Article