ARTICLE AD BOX
ஒருபக்கம் 'சூர்யா 44' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் 'சூர்யா 45'க்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் மும்முரமாகியிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் சூர்யாவின் 44 படத்தில் பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
Here’s #TheOneSong https://t.co/5Hx6UC4api
A @Music_Santhosh Musical
ft. @sidsriram @shanvdp #SaNa @Lyricist_Vivek Backing vocals by #Mahalakshmi #Victor@tseriessouth #LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/Cs77Ykzd6i
சந்தோஷ் நாரயணின் இசையில் 'love laughter war' காதலும், கோபமுமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. 'RETRO' டைட்டில் டீஸர் வெளியாகி காதல், ஆக்ஷன் மோடின் உச்சத்தில் சூர்யா ரெட்ரோ அவதாரம் எடுத்திருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து 'கண்ணாடி பூவே', 'கணிமா' பாடல்கள் காதல் சோகம், கல்யாணக் கொண்டாட்டம் என கவனம் ஈர்த்திருந்தது. இதையடுத்துத் தற்போது `ஒரு தீயில சொல்லெடுத்து...' என்ற பாடலாசிரியர் விவேக் வரிகளில் ''The One' பாடல் வெளியாகியிருக்கிறது. நரம்புகள் முறுக்கேறும் மாஸ் பாடலான இதை சந்தோஷ் நாரயணன், சித் ஶ்ரீராம் பாடியிருக்கிறார்கள்.

8 months ago
8






English (US) ·