Retro: ``கார்த்திக் சுப்புராஜ் அது மாதிரி கதை வெச்சிருக்காரு; அதை தான் முதல்ல சொன்னாரு!'' - சூர்யா

7 months ago 8
ARTICLE AD BOX

சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'Love, Laughter, War' என்ற மூன்று பகுதிகளிலும் சூர்யா தனது நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார்.

அதேபோல், பூஜா ஹெக்டே தனது 'ருக்மணி' கதாபாத்திரத்தின் மூலம் பலருக்கும் பேவரைட்டாகியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Retro TeamRetro Team

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவரும் திரைப்படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி விவாதித்து, அதை ஒரு காணொளியாக 'ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்' யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.

Retro: ``சித்தா பாட்டு கேட்டு என் மகளை நினைச்சு அழுதேன்'' - எமோஷனலான சூர்யா!

அந்த காணொளியில் சந்தோஷ் நாராயணன், "உங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டைப் பற்றி எந்த விஷயத்தையும் சிந்திக்காமல் எப்படியான படம் செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சூர்யா, "அப்படியொரு கதையைக் கார்த்திக் சுப்புராஜ் வைத்திருக்கிறார்.

அதைத்தான் முதலில் என்னிடம் சொன்னார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நமக்காக ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்று நினைப்போம்.

SuriyaSuriya

மார்க்கெட் என்று சுற்றி இருக்கும் எந்தத் தடைகளைப் பற்றியும் சிந்திக்காமல் ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

என்னுடைய பல திரைப்படங்கள் பெரிய பட்ஜெட்டில் இல்லாமல்தான் எடுக்கப்பட்டவை. 'காக்க காக்க' படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல், இறுதியில் தாணு சாரிடம் அந்தப் படம் சென்றது.

அப்படியிருந்தும் 'உயிரின் உயிரே' பாடலை அந்தமான் பகுதிக்குச் சென்று படமாக்கினோம்" என்று கூறினார்.

Retro நாயகிகள் 02: `எனக்கு மரியாதை தெரியாதா? சினிமாவை விட்டே போயிடுறேன்’ - சுஜாதா பர்சனல்ஸ்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article