Retro: ``சித்தா பாட்டு கேட்டு என் மகளை நினைச்சு அழுதேன்'' - எமோஷனலான சூர்யா!

7 months ago 8
ARTICLE AD BOX

சூர்யாவின் Retro திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களி வரவேற்பைப் பெற்றுவருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன், நாசர், ஸ்வாசிகா, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை முன்னிட்டு யூடியூபில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உரையாடும் வீடியோவெளியிடப்பட்டது.

Santhosh Narayanan Santhosh Narayanan

அதில் சந்தோஷ் நாராயணன் இசை பற்றி பேசிய சூர்யா, சித்தா படத்தில் வரும் பாடலைக் கேட்டு கண்ணீர் சிந்திய நினைவைப் பகிர்ந்துள்ளார்.

சூர்யா, "வாழ்க்கையில் நம்முடன் கனக்ட் ஆகும் பாடல்கள் எப்போதும் நம்முடன் இருக்கும். என் உணர்வுகளை இன்னும் உண்மையானதாக மாற்றும்.

இப்போது என் மகள் அமெரிக்காவுக்குப் படிக்கப்போவதால் அடிக்கடி சித்தா பாட்டுதான் கேட்கிறேன். அந்தப் பாடலைக் கேட்கும்போது தாரதாரையாக அழுகை வருகிறது" என்றார்.

"ஒருநாள் 3 மணிக்கு நாம் நைட் ஷூட்டிங்கில் இருக்கும்போது என் மகள் எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பியிருந்தார். அமெரிக்கா செல்வது பற்றி, அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது நான் தற்செயலாக அந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவு அழுகை வரத் தொடங்கியது."

Retro

"நான் முன்னரே அந்த பாடலைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் (சந்தோஷ் நாராயணன்) சித்தார்த் பாடுவதை நேரில் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையான எமோஷனோடு கலந்த பிறகு, இனி அந்த பாடலை எங்கு கேட்டாலும் எனக்கு அந்த நாள்தான் நினைவுக்கு வரும்." என்றார்.

சித்தா பாடல் குறித்து சந்தோஷ், "அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஒரு கிஃப்டாக இந்த பாடலை பண்ணிக்கொடுத்தேன்.

'நீங்க படத்தில் முடிந்தால் வைங்க இல்லைன்னா சும்மார் ரிலீஸ் செய்ங்க' என சொல்லிதான் கொடுத்தேன்." என்றார்.

Retro: "கனிமா பாட்டு செம மொக்கையா இருந்தது" - ஓப்பனாக பேசிய சந்தோஷ் நாராயணன்; ஷாக் ஆன சூர்யா!
Read Entire Article