ARTICLE AD BOX
சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
சூர்யாவின் பாரி கதாபாத்திரத்திற்கும் பூஜா ஹெக்டேவின் 'ருக்மணி' கதாபாத்திரத்திற்கும் மக்களின் அன்பு கிடைத்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் அனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்களிடையே சரியாக கிளிக் அடித்திருக்கிறது.
படம் வெளியானப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்திற்குப் பேட்டிக் கொடுத்திருக்கிறார்.
பாக்ஸ் ஆபீஸ் கவலை இல்லாமல்..!
அந்த நேர்காணலில் தன்னுடைய அடுத்த திரைப்படம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.
அவர், "அடுத்த என்ன படம் செய்யப் போகிறேன் என இன்னும் முடிவு செய்யவில்லை. 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை முடித்தப் பிறகு ஒரு சுயாதீன திரைப்படத்தை இயக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
அத்திரைப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி சில நாட்களுக்குப் பிறகு திரையரங்க வெளியீட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என நினைத்திருந்தேன்.
அதற்கான ஸ்கிரிப்ட்டும் என்னிடம் தயாராக இருக்கிறது.
Karthik Subbarajஆனால், 'டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகுதான் 'ரெட்ரோ' திரைப்படம் எனக்கு அமைந்தது.
பாக்ஸ் ஆபீஸ் போன்ற எந்தக் கவலையும் இல்லாமல் இந்த சுயாதீன படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
'ரெட்ரோ' படத்தை பொறுத்தவரையில் அது குறிப்பிட்ட பட்ஜெட்டை டிமாண்ட் செய்தது.
சுயாதீன திரைப்படத்தை குறைவான பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்து எடுக்க முடியும்.
அதுதான் என்னுடைய அடுத்த திரைப்படமாக இருக்குமென நினைக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

7 months ago
8






English (US) ·