Samantha: அட்லீ இயக்கத்தில் மீண்டும் சமந்தா நடிக்கிறாரா ? - பதில் சொல்கிறார் சமந்தா

7 months ago 8
ARTICLE AD BOX

நடிகை சமந்தா 'சுபம்' என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுக்கிறார் சமந்தா.

இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளுக்காக சுற்றி வருகிறார் சமந்தா.

SamanthaSamantha

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் திரைப்படத்தில் சமந்தாதான் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிசுகிசுக்கப்பட்டது.

அது தொடர்பாக இத்திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் சந்திப்பில் பேசியிருக்கிறார் சமந்தா.

Samantha: "நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆகிறேனா...” - வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா!

அவர், "இயக்குநர் அட்லீயும் நானும் நல்ல நண்பர்கள். வருங்காலத்தில் நானும் அவரும் இணைந்து பணியாற்றுவோம். ஆனால், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை." எனக் கூறி தகவல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் சமந்தா 'தெறி', 'மெர்சல்' ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் பிரமாண்டமான வகையில் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

SamanthaSamantha

சமந்தா 'மா இன்டி பங்கரம்' என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கடந்த ஆண்டே வெளியாகியிருந்தது.

அது தொடர்பாக பேசிய சமந்தா, "அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கவிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியதும் விரைவில் அதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும்.

ஒரு வகையிலான கதைகளில் மட்டுமே நான் நடிக்கவேண்டும் என எனது எல்லையை நானே சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை." எனக் கூறியிருக்கிறார்.

Samantha: "ஒரு நடிகையாக நான் கற்றுக்கொண்டதை விட..." - தயாரிப்பாளர் அவதாரம் குறித்து சமந்தா பளீச்
Read Entire Article