Samantha: "ஒரு நடிகையாக நான் கற்றுக்கொண்டதை விட..." - தயாரிப்பாளர் அவதாரம் குறித்து சமந்தா பளீச்

7 months ago 8
ARTICLE AD BOX

நடிகை சமந்தா 2023-ம் ஆண்டு ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures)  என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

அப்போதே, ''இந்தத் தளத்தின் மூலமாக சமூக கட்டமைப்பில் உள்ள வலிமையானதும், சிக்கலானதுமான கதைகளைப் பேசலாம்” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'சுபம்' தெலுங்கு திரைப்படம் மே 9 அன்று திரையில் வெளியாகவிருக்கிறது.

samantha ruth prabhusamantha ruth prabhu

தயாரிப்பாளர் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா, ``ரிஸ்க் எடுக்காமல் அர்த்தமுள்ள எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

நான் ரிஸ்க் எடுப்பதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. பெரும்பாலும், அந்த ரிஸ்க் பலனளித்துள்ளது.

15 ஆண்டுக் கால திரைத்துறையில் நான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில், நான் சொல்ல விரும்பும் கதைகளை அணுகுவதற்கான நுண்ணறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளேன் என்று நம்புகிறேன்.

ஒரு நடிகையாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்றாலும், திரைப்படத் தயாரிப்பும் கற்றலின் ஒரு பகுதி என்றே நினைக்கிறேன்.

ஒரு தயாரிப்பாளராக இருக்கும்போது, ​​திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

அதில் நம்ப முடியாத அளவிற்குத் திருப்தி இருக்கிறது. ஒரு நடிகையாக இருந்து நான் கற்றுக்கொண்டதை விட இந்தப் படத்தைத் தயாரித்ததின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டேன்.

samantha ruth prabhusamantha ruth prabhu

இன்னும் கற்றுக்கொள்ள, பங்களிக்க நிறைய இருக்கின்றன. எனவே, நான் ஒரு குறிப்பிட்ட வகை படங்களுக்கு மட்டும் என்னை மட்டுப்படுத்த விரும்பவில்லை. நான் பரந்தளவிலான கதைகளைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.

ஆனால் இயற்கையாகவே, ஒரு பெண்ணாக, எந்த வகையான கதைகளால் ஈர்க்கப்படுகிறேன், எந்த வகையான கதைகளை உருவாக்க விரும்புகிறேன் என்பதை எனது அனுபவப் பார்வையின் மூலம் தீர்மானிப்பேன்" என்றார்.

Samantha: `ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்?' - சமந்தா லைக் செய்த வீடியோ

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article