ARTICLE AD BOX
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்ம் ஒன்றைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், "எனது கனவுத் திட்டம் ஒன்றை இன்று (அக்.1) தொடங்கி இருக்கிறேன்.
சந்தோஷ் நாராயணன்உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களுக்காக ஒரு மிகத் தெளிவான, விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்மை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பிளாட்ஃபார்ம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, சேவைகள் வழங்கப்படும்.
இதில் பிரபலமான கலைஞர்களும், வருங்கால சூப்பர் ஸ்டார்களும் பங்குபெறப்போகிறார்கள்.
கலைஞர்களுக்கு அதிகபட்ச வருமானம் கிடைக்கும் விதமாகவும், சந்தாதாரர் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்) குறைவாக இருக்கும் விதமாகவும் இந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் இருக்கும்.
இசையில் ஆர்வம் இருக்கக்கூடிய சிறந்த இளைஞர்களைக் கண்டறிய சில ஹேக்கத்தான் நிகழ்வுகளையும் நடத்த இருக்கிறோம்.
Starting one of my dream projects today. Building an ultra transparent affordable music streaming platform from India for anyone in the world who streams music. Will see a massive set of legendary artists and upcoming superstars in this platform We will keep artist payouts and…
— Santhosh Narayanan (@Music_Santhosh) October 3, 2025உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்க நான் செய்யும் சிறிய முயற்சி. இந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மிற்கு ஒரு நல்ல பெயரைச் சொல்லுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
Santhosh Narayanan: `தமிழ்த் திரையிசையின் மாயாவி!' சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள் பகிர்வு
2 months ago
5





English (US) ·