ARTICLE AD BOX
`டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'நன்றி தெரிவிக்கும் விழா' நடைபெற்று வருகிறது.
அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், "நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் பெருமை இயக்குநருக்குத்தான் (அபிஷன் ஜீவிந்த்) சேரும்.
இந்தப் படத்தை எனக்குக் கொடுத்ததற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். கதை எழுதுவதற்கு வயது முக்கியம் இல்லை என்பதை அபிஷன் நிரூபித்து விட்டார்.
உனக்கு அடுத்த படம் எடுப்பதுதான் கடினமாக இருக்கும். அதையும் முதல் படமாக நினைத்து எடு. உன்னுடைய அடுத்த வெற்றிக்காக நான் காத்திருக்கிறேன். சரியான படத்தை மட்டும் எடுத்துவிடு அபி" என்று கூறியிருக்கிறார்.
சிம்ரன் - அபிஷன் ஜீவிந்த்தொடர்ந்து சிம்ரன் குறித்துப் பேசிய சசிகுமார், "உங்களுடைய படத்தை எல்லாம் நாங்கள் அவ்வளவு ரசித்துப் பார்த்திருக்கிறோம்.
சிம்ரன் மேமுடன் பணியாற்றியது சந்தோஷமான தருணமாக இருந்தது. 'வந்தது பெண்ணா வானவில் தானா?' என்று தியேட்டரில் பார்த்திருப்போம். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் அவர்களை அப்படி ரசித்துப் பார்த்திருப்போம்.
Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!ஆனால் அவர் செட்டிற்கு வரும்போது எந்த ஒரு சீனியாரிட்டியும் காட்டவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்து தமிழைக் கற்றுக்கொண்டு இவ்வளவு படங்களில் நடித்திருக்கிறார்.
அதனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று பேசியிருக்கிறார்.
சசிகுமார் மேலும் பேசிய அவர், "கமலேஷ் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று நான் அப்போதே சொன்னேன். இந்தப் படத்தில் முழு காமெடியும் பண்ணுவார் என்று சொன்னேன்.
அதேபோல நன்றாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள். எல்லோருக்கும் நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.
Tourist Family: "இந்தப் படத்திற்குப் பிறகு என்னுடைய சம்பளம்..." - சசிகுமார் ஓப்பன் டாக்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

7 months ago
8





English (US) ·