ARTICLE AD BOX
YNOT Studio மூலம் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த சசிகாந்த், இப்போது ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். பிரபல சிங்கரான சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
TEST படக்குழுவினர்.இதில் பேசியிருக்கும் நடிகர் சித்தார்த், "சிறுவயதிலிருந்து நான் பார்த்து ரசித்து, வியந்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். இப்படத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டராக நடித்திருக்கும் நான், அவரைப் பார்த்து ரசித்து கற்றுக் கொண்டதை இப்படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய இக்கதாபாத்திரத்தை அவருக்கே சமர்ப்பிக்கிறேன். உதவிய இயக்குநராகப் பணி செய்தபோது நான் முதன் முதலில் பார்த்து வியந்த ஹீரோ மேடி. அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது அவருடன் நடிக்கும்போதும் நிறையக் கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் எல்லா கதாபத்திரமும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். உங்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். புதிய களமாக, சிறப்பான திரைப்படமாக இப்படம் இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

9 months ago
8






English (US) ·