ARTICLE AD BOX
YNOT Studio தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சசிகாந்த் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர். இப்போது ‘டெஸ்ட்’ மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 'நெஞ்சுக்குள்ள...', 'நெஞ்சமே நெஞ்சமே...' போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடிய பிரபல சிங்கரான சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
TEST படக்குழுவினர்இதில் பேசியிருக்கும் நடிகர் மாதவன், "ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் சிறப்பாகப் பண்ணனும் என்பதே என்னோட எண்ணம். என்னுடைய மொத்த அனுபவத்தையும் கொடுத்து நடிச்சிருக்கேன். இந்த மாதிரி கதாபாத்திரம் கிடைக்கிறது கஷ்டம். அதை நல்லா பண்ணிருக்கேன். உணர்வுகளை ஆழமாக உள்வாங்கி நடிப்பவர் என்று என்னை சொல்றீங்க. நான் என் கதாபாத்திரத்தை ஆழமாக உள்வாங்கி நடிக்கிறேன் அவ்வளவுதான். படம் நன்றாக வந்திருக்கு பாருங்கள்" என்று பேசியிருக்கார்.
TEST: ``நானும் மேடியும் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடி; நானும் நயன்தாராவும் ஒரே ஊர்" - மீரா ஜாஸ்மின்
9 months ago
8






English (US) ·