Thug Life: "நான் ராமர் இல்ல; ராமரின் அப்பா வகையறா" - திருமணம் குறித்த கேள்விக்குக் கமல் ஹாசன் பதில்

8 months ago 8
ARTICLE AD BOX

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.

கமல் - சிம்பு - த்ரிஷாகமல் - சிம்பு - த்ரிஷா

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் த்ரிஷாவிடம் திருமணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டார்.

அதற்குப் பதிலளித்த நடிகை த்ரிஷா, "எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை, நடக்காவிட்டாலும் பரவாயில்லை" என்றார்.

Thug Life: ``பொன்னியின் செல்வன் கேட்டார்.. முடியாதுனு சொல்லிட்டேன்'' - கமல் - மணிரத்னம் உரையாடல்

அதைத்தொடர்ந்து பேசிய கமல் ஹாசன், "இவங்க ஓட்டு போடுவாங்களா மாட்டாங்களா... வந்தாலும் சரி வரலானாலும் சரி என்கிறார். ஓட்டு போடுபவர்கள் யாரும் அப்படி நினைக்காதீங்க.

கமல் - சிம்பு - த்ரிஷாகமல் - சிம்பு - த்ரிஷா

என்னிடம் எம்.பி., பிரிட்டாஸ், 'நீங்க பிராப்பர் பிராமணர். ராமரை வணங்கும் நீங்க எப்படி ரெண்டு கல்யாணம் பண்ணலாம்?' எனக் கேட்டார்.

நான் கடவுளை வணங்குவதில்லை என்பது வேறு விஷயம். பிராப்பர் குடும்பத்திலிருந்து வருவதற்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்னு எனக்குத் தெரியல.

அவருக்கு நான் பதில் சொன்னேன், `நான் ராமர் இல்ல ராமர் அப்பா வகையறா. இன்னும் 49 ஆயிரத்துச் சொச்சம் கல்யாணம் பாக்கி இருக்கு" எனப் பேசினார்.

Thug Life: "விண்ணைத் தாண்டி வருவாயா... இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு" - நடிகை த்ரிஷா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article