ARTICLE AD BOX
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.
நடிகை த்ரிஷாஇந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு 'தக் லைஃப்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர்.
Thug Life: "கமல் சார் என்னுடைய குரு; ஒரு ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படம்.." - நெகிழ்ந்த நடிகர் சிம்புஇதில் மணிரத்னம் மற்றும் கமல் இருவரும் கலந்துரையாடியது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
கமல் :
மணி ரத்னமுக்கு ஓகே சொல்லி 45 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இருவரும் வெவ்வேறு பாதைகளில் இருந்தோம். அதனால்தான் இந்த தாமதம். நானும் மணி ரத்னமும் பார்க்கும்போதெல்லாம் கதைகள் பேசுவோம். அப்றோம் தனித் தனியாக எடுத்தோம். இப்போது மணி ரத்னம் வெள்ளை டை அடிச்சிருக்கார். அதுதான் நாயகன் மணி மற்றும் தக் லைப் மணி ரத்னமுக்கும் உள்ள வித்தியாசம்.
மணிரத்னம், கமல்இது கட்டுபடி ஆகாது
மணி ரத்னம் :
இத்தனை வருஷமாக ராஜ் கமல் நிறுவனத்துல என்னைக் கூப்பிடல.
உடனே கமல்...
கதை சொன்னாரு. இது கட்டுபடி ஆகாதுன்னு கையை மாசஜ் பண்ணி அனுப்பினோம். அந்த படம்தான் 'பொன்னியின் செல்வன்'.
Thug Life: ``சிம்பு சார் என்னைக் கூப்பிட்டு பேசிய அந்தத் தருணம்" -அசோக் செல்வன்மாப்பிள்ளை அவருதான்
கமல் :
இன்னைக்கு பலரும் எழுத நினைக்கிறார்கள். அது தவறு கிடையாது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம். நான் முன்னாடி சொன்ன கதை பிடித்திருந்ததாக மணி சொன்னாரு. அந்தக் கதையிலிருந்து இன்ஸ்பயராகி அவர் களத்துல பயணிச்சிருக்கார். பெண்ணை கொடுத்தாச்சு. மாப்பிள்ளை அவரு. குழந்தை எப்படி வருதுன்னு பார்க்கணும்.
ஏ.ஆர். ரஹ்மான்அன்பு மிரட்டல்
ரஹ்மான் :
கமல் சார் எனக்கு கால் பண்ணி முழு விஷயத்தையும் இந்த படத்துக்கு கொடுக்க சொன்னாரு. ஒரு அன்பு மிரட்டல்அது!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Vikatan Whatsapp Channel
8 months ago
8






English (US) ·