ARTICLE AD BOX
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், 'தக் லைஃப்' எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.
Thug Life விருந்துஇந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு 'தக் லைஃப்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தனர்.
Thug Life விருந்துஇந்த 'தக் லைஃப்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் தடபுடலாக விருந்து வைக்கப்பட்டுள்ளது. அசைவை ஐட்டங்களில் மட்டன் சுக்கா, மட்டன் பிரியாணி, சிக்கல் கோலா உருண்டை, தொக்கு, வஞ்சரம், அசோக அல்வா எனவும் சைவத்தில் சில்லி மல்லி பனீர் வருவல், பனீர் பெப்பர் ப்ரே, பிரியாணி தொக்கு, கார கொழம்பு, உருளைக் கிழங்கு மீன் வருவல் என விருந்து வைக்கப்பட்டது.
நாட்டுக் கோழி, நாட்டு சமையலுக்கு பெயர்போன சென்னையின் பிரபல 'மஞ்சள் ரெஸ்டாரண்ட்' இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தது. 'விக்ரம்' படத்திற்கு 'மாதம்பட்டி ரங்கராஜ்' விருந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 'மஞ்சள் ரெஸ்டாரண்ட்'-ல் இருந்து விருந்து வைக்கப்பட்டிருக்கிறது.
Thug Life: "கமல் சார் என்னுடைய குரு; ஒரு ஃபேன் பாயாக சொல்றேன் இந்த படம்.." - நெகிழ்ந்த நடிகர் சிம்பு
8 months ago
8






English (US) ·