ARTICLE AD BOX
அஜித், த்ரிஷா நடித்திருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரல் த்ரிஷா நடித்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அர்ஜூன் தாஸ், ப்ரசன்னா, சுனில், ப்ரியா வாரியர், சைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திங்களில் நடித்திருக்கிறார்கள்.
Good Bad Uglyத்ரிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் பதிவு வைரலாகப் பரவி வருகிறது. சமூக வலைதளப் பக்கங்களில் முக அடையாளமின்றி டாக்சிக் பதிவுகளைப் பதிவிட்டு வருபவர்களுக்காக இப்பதிவை த்ரிஷா போட்டிருக்கிறார்.
Good Bad Ugly Movie Review | Ajith Kumar, Trisha, Arjun Das | Adhik Ravichandran | GV Prakashதன்னுடைய பதிவில் த்ரிஷா, ''டாக்சிக் நபர்களே நீங்கள் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள் மற்றும் நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக வலைதளங்களில் அமர்ந்து மற்றவர்களைப் பற்றி அர்த்தமற்றவற்றைப் பதிவிடுவது அன்றைய நாளில் உண்மையாகவே மகிழ்ச்சியாக்குகிறதா?
Trisha's Instagram Storyஉங்களுக்காகவும், உங்களுடன் வாழும் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும் உண்மையில் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். இது உண்மையிலேயே பெயரில்லா (Anonymous) கோழைத்தனம்! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Trisha: நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்பங்கள் |Photo AlbumVikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


8 months ago
8






English (US) ·