ARTICLE AD BOX
2002ல் வெளியான தமிழன், தளபதி விஜய் ஊழலுக்கு எதிராக கொந்தளித்த முதல் திரைப்படமாகும். அரசின் நிர்வாக பிரிவுகளில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டியிருப்பார்
2013ல் வெளியான தலைவா படத்தை ஏ.எல்.விஜய் இயக்கிருந்தார். இப்படம் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் என்ட்ரியை விஜய் மக்களிடம் அழுத்தமாக வெளிப்படுத்தினார்
படத்தின் 'டைம் டூ லீட்' என்கிற டேக் லைனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கினர். வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் என்கிற பாடல் வரியும் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியது
விஜய்யின் கத்தி திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இதில் 2ஜி ஊழலை பற்றி வெளிப்படையாக பேசியிருப்பார். அச்சமயத்தில் 2ஜி ஊழல் அரசியல் களத்தில் பேசும் பெருளாக இருந்தது
2ஜி ஊழல் தவிர விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள், கார்ப்பரேட் அரசியல் போன்றவற்றை பற்றியும் அழுத்தமாக பேசியிருப்பார்
அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் தனியார் மருத்துவனைகள் மற்றும் அரசின் GST திட்டத்தை பற்றி வெளிப்படையாக விமர்சித்திருப்பார்
இது விஜயின் அரசியல் என்ட்ரியை பக்கவாக வெளிப்படுத்திய படம். அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவசங்களை பற்றி கடுமையாக விமர்சித்திருப்பார். முழு முழுக்க அரசியல் படமாக அமைந்தது
இது விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமாகும். அவரது நிஜ வாழ்க்கை காட்சிகள் அழுத்தமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்டர் MGR ரெபரன்ஸூம் அமைந்துள்ளது
Thanks For Reading!








English (US) ·