ARTICLE AD BOX
சூப்பர் ஸ்டார் ரஜினி, திரைப்படங்களால் மட்டுமல்ல, அவர் அரசியல் வரலாறு மற்றும் ரசிகர்களுடன் வைத்திருக்கும் உறவால் எப்போதுமே ரசிகர்கள் மனதில் குடி புகுந்திருக்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் பழைய அரசியல் அறிக்கை மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த அறிக்கை தற்போது வைரல் ஆவதற்கு ஒரு பெரிய பின்னணி உள்ளது.
கரூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது இந்த விவாதத்தை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது. இதன் தாக்கம் ரஜினியின் ரசிகர்களிடையே பெரிய அளவில் காணப்படுகிறது. இதன் வழியாக அவர்கள், விஜய் மற்றும் TVK (Thamizhaga Vetri Kazhagam) கட்சியையும் பகிரங்கமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
ரஜினி அரசியலில் வராமலிருந்த காரணம்
2020-ல், ரஜினி அரசியலில் வருவதாக எதிர்பார்த்த மக்கள், திடீரென்று அவர் வெளியிட்ட அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் அவர் கூறியதாவது:
“என்னை நம்பி வருபவர்களை நான் பலியாக்க விரும்பவில்லை. பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினால், மக்களுக்கு கொரோனா பரவக்கூடும். உயிர் போனாலும் பரவாயில்லை என்று என்னை நம்பும் நபர்களை உயிரை இழக்கும் நிலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை.”
இந்த உரையை வாசிக்கும் போது, ஒரு நடிகராக அல்லாது, மக்கள் நலனை சிந்திக்கும் மனிதராக அவர் எடுத்த முடிவு தெளிவாக தெரிகிறது.
தற்போது இந்த அறிக்கையை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு இதுதான் உண்மையான தலைவன் செய்யக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. மக்களின் நலனுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அரசியலில் இருந்து எங்கள் தலைவர் விலகி சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து வருகிறார் என்று விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்கள் இணையத்தில் அந்த அறிக்கையை பதிவிட்டு வருகிறார்கள்.
rajini vijay photoகரூரில் நடந்த சம்பவம்
கரூர் பகுதியில் TVK கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது தமிழகமே திக்கு முக்காடி வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர்கள், “எங்கள் தலைவர் எப்போதுமே மக்களின் நலனுக்காக தன்னை தியாகம் செய்தவர்” என்று கூறி, அவர் வெளியிட்ட அரசியல் அறிக்கையை மீண்டும் இணையத்தில் வாசல் வாசலாக ஷேர் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் இந்த அறிக்கையை பகிரும்போது,
- இவர் போல யாரும் இருக்க முடியாது
- Box Office கிங் மட்டும் இல்ல, மனிதத்துவத்தின் சூப்பர் ஸ்டார்
- விஜய் இன்னும் வளர்ந்து வருகிறவர், ஆனால் ரஜினி ஒரு லெஜண்ட்
- என கூறி TVK- கட்சிக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

3 months ago
4






English (US) ·