Varun Tej: 'வாழ்க்கையின் மிக அழகான பகுதி!' - கர்ப்பமானதை அறிவித்த லாவண்யா த்ரிபாதி

7 months ago 8
ARTICLE AD BOX

நடிகை லாவண்யா த்ரிபாதிக்கும் டோலிவுட் நடிகர் வருண் தேஜுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

லாவண்யா த்ரிபாதி தமிழில் 'பிரம்மன்', 'மாயவன்' ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

லாவண்யாவும் வருண் தேஜும் 'மிஸ்டர்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

Varun TejVarun Tej

அத்திரைப்படத்திற்குப் பிறகுதான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

வருண் தேஜ் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபுவின் மகன் என்பது குறிப்பிடதக்கது.

லாவண்யா த்ரிபாதி தற்போது கர்ப்பமாக இருப்பதாக இந்தத் தம்பதி இணைந்து தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிர்ந்து அவர்கள், "வாழ்க்கையின் மிக அழகான பகுதி விரைவில் வரவிருக்கிறது." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.

இந்தத் தம்பதிக்கு ராம் சரணின் மனைவியும், அல்லு அர்ஜூனின் மனைவியும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களைத் தாண்டி சினிமாத் துறையிலிருந்து ரிது வர்மா, அதிதி ராவ், ரெஜினா, சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோரும் தங்களின் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்கள்.

லாவண்யா நடிக்கும் 'சதி லீலாவதி' என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

வருண் தேஜ் நடித்திருந்த 'ஆப்ரேஷன் வேலன்டைன்', 'மட்கா' ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தன.

தற்போது அவர் தன்னுடைய 15-வது படத்தில் நடித்து வருகிறார்.

Read Entire Article