ARTICLE AD BOX
சீயான் விக்ரம் நடிப்பு மற்றும் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கம் காம்போவில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் - பாகம் 2' திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழாஇசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சித்தா
நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், ``நான் 'சித்தா'னு ஒரு படம் பார்த்தேன். அந்த படம் பார்த்ததுக்கு பிறகு இயக்குநர் அருண்குமார்னு நான் கூப்பிட்டது கிடையாது. 'சித்தா'னுதான் கூப்பிட்டிருக்கேன். அவருடைய படங்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். இது சேதுபதி மாதிரி ரகளையான படம். அதேசமயம் சித்தா மாதிரி எமோஷனலாகவும் இருக்கும்.
விக்ரம்எஸ்.ஜே. சூர்யா
கொஞ்சம் வித்தியாசமான படங்கள் ரசிகர்கள் கேட்டாங்க. அப்படி ஒரு படம்தான் 'வீர தீர சூரன்' திரைப்படம். இந்த பயணத்துல அருண் இருந்தது எனக்கு பலமாக இருந்தது. எஸ்.ஜே. சூர்யா தொடர்ந்து படப்பிடிப்புல இருந்துட்டு தூங்காமல் இன்னைக்கு வந்திருக்காரு. இதை முடிச்சுட்டு எங்க படத்தோட டப்பிங் போறாரு. தொடர்ந்து ஓடிகிட்டே இருக்காரு.
ஜி.வி.பிரகாஷ்ஜி.வி
ஜி.வி என்னுடைய படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கார். என்னுடைய படங்கள்ல அவருடைய இசை இன்னொரு கதாநாயகன். இந்த படத்தில பின்னணி இசை வேற மாதிரி இருக்கும். நான் டைரக்டர் எஸ். ஜே. சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகன். இப்போ படப்பிடிப்புக்கு பிறகு நான் நடிகர் எஸ். ஜே சூர்யாவுக்கு ரசிகன் ஆகிட்டேன்.
சுராஜ் சமீபத்துல கொடுத்த நேர்காணல் மூலமாக வைரல் ஆகிட்டாரு. அவர் பேசின 'டேய் குமாரு'ங்கிற டயலாக் இப்போ மீம் கன்டென்ட் ஆகிடுச்சு." என்று கலகலப்பாகக் கூறினார்.
`Veera Dheera Sooran மேக்கப்ல Deiva Thirumagal Krishna-வா நடிப்பாரு!' - Dhushara Vijayan | VikramVikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
9






English (US) ·