Veera Dheera Sooran: `படத்தை வெளியிட 4 வாரங்கள் இடைக்கால தடை' -என்ன சொல்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்?

9 months ago 8
ARTICLE AD BOX

விக்ரம் நடிப்பில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் இன்று `வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாகவிருந்தது. இன்றைய ரிலீஸுக்காக படக்குழுவினர் கடந்த சில நாள்களாக பரபரபான ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான `எச்.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்துக்கு பி4யூ நிறுவனம் பைனான்ஸ் செய்திருக்கிறது.

Veera Dheera SooranVeera Dheera Sooran

அதுமட்டுமின்றி, படத்தின் ஓ.டி.டி உரிமத்தை இந்த `பி4யூ' நிறுவனத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.டி.டி உரிமம் விற்கப்படுவதற்கு முன்பே திரைப்படம் வெளியாவதால் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகக் கூறி இந்த `பி4யூ' நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

Veera Dheera Sooran: ஸ்டைலிஷ் சியான் டு கியூட் துஷாரா | வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா Photo Album

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைகால தடை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

`வீர தீர சூரன்' படக்குழு உடனடியாக 7 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் படத்தின் அத்தனை ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Veera Dheera SooranVeera Dheera Sooran

தற்போது இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடை ரசிகர்களை வருத்தமடைய வைத்திருக்கிறது.

Veera Dheera Sooran: "போலீஸ் கிட்ட அடிவாங்கி அன்னைக்கு `தூள்' பார்த்தேன்; இன்னைக்கு.." - அருண்குமார்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article