Vijay Sethupathi: ``ஆக்ஷன் சினிமா மீது என் மகனுக்கு இருக்கும் ஈடுபாடு!" - விஜய் சேதுபதி பேச்சு

1 month ago 3
ARTICLE AD BOX

ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடித்திருந்த பீனிக்ஸ்' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் தமிழில் திரைக்கு வந்திருந்தது.

பீனிக்ஸ் திரைப்படம்பீனிக்ஸ் திரைப்படம்

இப்போது அப்படத்தைத் தெலுங்கில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். நவம்பர் 7-ம் தேதி பீனிக்ஸ்' படத்தின் தெலுங்கு டப் வெர்ஷன் திரைக்கு வருகிறது. அதையொட்டிப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

விஜய் சேதுபதி பேசுகையில்,``நான் 'ஜவான்' படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச் சொல்லி, "என் மகன் இதில் நடிக்கட்டும்" என்றார்.

நான் 'நீங்களும் அவரும் பேசிக்கொள்ளுங்கள்' என்றேன். அதன் பிறகு நான் அதற்கு வரவில்லை. படத்தைப் பார்த்தபோது மிகவும் சந்தோஷமா இருந்தது.

இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம். சூர்யாவுக்கு சிறு வயதிலிருந்து ஆக்‌ஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் மாஸ் சினிமா ரொம்பப் பிடிக்கும்.

எப்போதும் என்னிடம், “டாடி, நீங்க இன்னும் அதிகமா மாஸ் படங்கள் செய்ய வேண்டும்!” எனச் சொல்வார்.

Vijay SethupathiVijay Sethupathi

ஆக்ஷன் சினிமா மீது சூர்யாவுக்கு இருக்கும் ஈடுபாடு இப்போது 'பீனிக்ஸ்' படத்தின் அவருடைய கதாபாத்திரத்தில் தெரிகிறது.

இந்தக் கனவை நிஜமாக்கிய அனல் அரசு மாஸ்டருக்கும், தயாரிப்பாளர் ராஜலட்சுமி மேடத்திற்கும் என் நன்றி.

நான் இப்போது பூரி ஜெகன்னாத் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படம் முடிவதற்கு தெளிவாக தெலுங்கு பேசுவதற்கு கற்றுக் கொள்வேன்.” என்றார்.

Read Entire Article