ARTICLE AD BOX
விக்ரம் நடித்திருக்கும் `வீர தீர சூரன்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி வெளியாகிறது. `சித்தா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படத்தை இயக்குநர் S.U அருண் குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்காக விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன், இயக்குநர் S.U. அருண் குமார் என அனைவரும் இணைத்து பேட்டியளித்திருக்கிறார்கள்.
Actor Vikramஇதில் பேசிய விக்ரம், ``எஸ்.ஜே. சூர்யா ஒவ்வொரு படத்துலயும் கலக்கிட்டு இருக்காரு. இந்தப் படத்துல அவர் நடிக்கலைன்னு சொல்றாரு. ஆனால், அவருடைய முக்கியமான நடிப்பை இந்தப் படத்துல பார்ப்பீங்க. ஒவ்வொரு காட்சியிலயும், ஒவ்வொரு வசனத்துலயும், ஒவ்வொரு வார்த்தையிலும் அற்புதமாக நடிச்சிருக்கார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். நடிப்பு மட்டுமில்ல டப்பிங்லயும் அவர் ஒரு மான்ஸ்டர். அவர் பண்ற விஷயங்களும் மான்ஸ்டர் மாதிரிதான் இருக்கும். படத்துக்குள்ள சுராஜ் வந்தது எங்களுக்கு ரொம்ப பூஸ்ட்டாக இருந்துச்சு. படம் ரொம்ப ராவ்வாக (Raw) இருக்கப்போறதுனால எல்லோருமே பெர்பாமெர்களாக இருக்கணும்னு முன்னாடியே திட்டமிட்டுட்டோம்.
முக்கியமாக எஸ்.ஜே. சூர்யா வந்தது எங்களுக்கு பெரிய வரம் மாதிரி இருந்தது. இந்தப் படத்துல இருக்கிற அனைவரோட கதாபாத்திரமும் கிரே ஷேட்லதான் இருக்கும். எல்லோருக்கும் ஒரு நியாயம் இருக்கும். இவங்க நல்லவங்க, கெட்டவங்கன்னு கிடையாது. துஷாரா விஜயன் கதாபாத்திரத்தைத் தவிர எங்களோட கதாபாத்திரம் ஒரு புள்ளியில சுயநலமாகத்தான் இருக்கும்." என்றார்.
Suraj Venjaramoodu & Arun Kumarஇவரை தொடர்ந்து சுராஜ் வெஞ்சாரமூடு பேசுகையில், ``என் வாழ்க்கையில முதல் முறையாக நான் போட்டோ எடுத்த ஒரு நடிகர், விக்ரம் சார்தான். `மஜா' திரைப்படத்தோட ஷூட்டிங் சமயத்துல நானும் என் மனைவியும் அவர்கூட போட்டோ எடுத்தோம். அதன் பிறகு கொஞ்ச வருஷம் கழிச்சு, சிங்கப்பூர்ல ஒரு மால்ல விமானத்துக்கு நேரமாகிடுச்சுனு கிளம்பிட்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் `சார் நான் உங்க மிகப்பெரிய ரசிகன். ஒரு போட்டோ கிடைக்குமா'னு கேட்டாரு. அப்போ திரும்பி பார்த்தால் விக்ரம் சார் இருந்தாரு!" என்றவர் சிரித்துக்கொண்டே, ``விக்ரம் சாருக்கு மேக்கப் மேன் பாம்பேல இருந்து வந்திருக்கார். ஆனால், எனக்கு மேக்கப் மேன் விக்ரம் சார்தான். எனக்கு மட்டுமில்ல நடிகர்கள் அனைவருக்கும் அவர்தான் மேக்கப் மேன்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

9 months ago
9






English (US) ·