Vikram: "முதல் பாகத்தில் திலீப் வருவார்; 3-ம் பாகத்தில் வெங்கட் இருப்பார்" - விக்ரம் கொடுத்த ஹின்ட்

8 months ago 8
ARTICLE AD BOX

சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் மார்ச் 27-ம் வீர தீர சூரன் - பாகம் 2 திரைப்படம் வெளியானது.

திரையரங்குகளில் தாமதமாகப் படம் வெளியானாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம்.

முன்கதை எதுவும் இன்றி நேரடியாக இரண்டாம் பாகம் பார்த்தது புது அனுபவமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வருகிறது படக்குழு. அதன் ஒரு பகுதியாகத் திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்திருக்கிறார் விக்ரம்.

வீர தீர சூரன் பாகம் 2 - விக்ரம்வீர தீர சூரன் பாகம் 2 - விக்ரம்

படம் முடிந்த பின் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விக்ரம், ``முதல் பாகம் பண்ணும்போது கண்டிப்பா திலீப் வருவார். மூன்றாம் பாகம் பண்ணும்போது வெங்கட் இருப்பாரு.

இயக்குநரோட திறமை என்னனா, ஒரு கதாபாத்திரத்தைக் காட்டாமலேயே அந்த கதாபாத்திரத்தை மையமா வெச்சு ஒரு படமே பண்ணியிருக்கார். அது ரொம்ப கஷ்டம்.

இப்போ ஒரு கதாபாத்திரத்தைக் காட்டி, அவங்க கஷ்டப்படுறது, அழுறதெல்லாம் காட்டாம, நம்மையே கற்பனை பண்ண வெச்சாருப் பாருங்க, அது பயங்கரமா இருந்துச்சு" என்று இயக்குநரைப் பாராட்டினார் .

விக்ரம்விக்ரம்

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாகப் பேசப்படும் திலீப் என்ற கதாபாத்திரம், படத்தில் யாரென்றே காட்டப்படாமல் வெறும் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.

மேலும், வெங்கட் கதாபாத்திரத்திற்கு என்ன ஆனது என்று காட்டாமல் படம் முடிந்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் பல கேள்விகளுக்குப் பதிலே தெரியாத நிலையில், அடுத்தடுத்த பாகங்களில் அவற்றுக்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article