Vishal: `அது வதந்தி!' - விஷால் `மகுடம்' படத்தை இயக்குவதாக பரவிய தகவல்களுக்கு இயக்குநர் பதில்!

2 months ago 4
ARTICLE AD BOX

ஈட்டி', ஐங்கரன்' படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தற்போது மகுடம்' படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99-வது திரைப்படம். இப்படத்தில் விஷாலுடன் துஷாரா விஜயன், அஞ்சலி எனப் பலரும் நடித்து வருகிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Vishal - MagudamVishal - Magudam

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மகுடம்' படத்திலிருந்து இயக்குநர் ரவி அரசு விலகிவிட்டதாகவும், அதற்குப் பதிலாக விஷால் படத்தை இயக்கி வருவதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது.

ஆனால், இயக்குநர் ரவி அரசு திருச்செந்தூர் கோவிலில் இருப்பதாக அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் ரவி அரசு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியிருக்கிறார். அவர், ``அது வதந்தி. கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நான்தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

படத்தின் ஐந்தாம் கட்டப் படப்பிடிப்பு தீபாவளி முடிந்ததும் தொடங்கும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து நடிகர் விஷால், படப்பிடிப்பு கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் உள்ளது. படமும் நன்றாக வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் விஷால்நடிகர் விஷால்

இந்த நேரத்தில், படத்தின் அவுட்புட் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன். இப்போது எதற்கும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், நான் சொல்வது ஒன்று மட்டுமே - எந்தக் காரணத்திற்காகவும் என் தயாரிப்பாளரை ஏமாற்றியதில்லை, மேலும் அனைவருக்கும் ஒரு நல்ல படத்தை வழங்குவேன் என்பதை உறுதி செய்கிறேன். அதுதான் இப்போது என் இலக்கு." எனக் கூறியிருக்கிறார்.

Read Entire Article