ARTICLE AD BOX
நகைச்சுவை ப்ராங்க் நிகழ்ச்சிகள் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் வி.ஜே. சித்து.
தற்போது 'வி.ஜே. சித்து விலாக்ஸ்' என்ற தன்னுடைய சொந்த சேனல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்திருக்கிறார் சித்து.
இவரும் ஹர்ஷத் கானும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காணொளிகளை எதிர்பார்த்து பாலோ செய்யும் ரசிகர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள்.
VJ Siddhu movie - Dayangaramசமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் ப்ரதீப் ரங்கநாதனின் கேங்கில் இருப்பவராக அன்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் சித்து.
இதன் பிறகு அவர் கூடிய விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டது.
தற்போது அத்திரைப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தை வி.ஜே. சித்துவே இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு 'டயங்கரம்' என தலைப்பு வைத்து, அறிவிப்பு காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
VJ Siddhu movie - Dayangaramஇந்த அறிவிப்பு காணொளியை நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

7 months ago
8






English (US) ·