VJS 52: 'Full Meals Ready' - விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இணையும் படத்தின் அப்டேட்!

7 months ago 8
ARTICLE AD BOX

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்துக்கான டைட்டில் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

VJS 52 என்ற தற்காலிக தலைப்புடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது.

#VJS52 shoot wrapped up@MenenNithya @VijaySethuOffl @pandiraj_dir @SathyaJyothi pic.twitter.com/8yHkUHpj2v

— Arjun Francis (@ArjunTej14) February 23, 2025

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சரவணன், யோகி பாபு, தீபா, போஸ் வெங்கட், உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பசங்க, வம்சம், மெரினா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி இணையும் முதல் படம் என்பதால் இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தின் டைடில் டீசரை மே 3ம் தேதி வெளியிடுவதாக சத்தியஜோதி நிறுவனம் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

Finally here we goo! The much awaited Makkal Selvan Vijay Sethupathi - director Pandiraaj entertainer #VJS52 title teaser revealing on May 3rd. Get ready for an ultimate fun ride! @VijaySethuOffl @MenenNithya @pandiraj_dir @PradeepERagav @Veerasamar @onlynikil pic.twitter.com/NOAbUaeDiv

— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 1, 2025

இந்த படம் பாண்டிராஜ் ஸ்டைலில் குடும்ப படமாக உருவாகியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

டைடில் சீடர் குறித்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ஹோட்டல் தீம் திரைப்படத்தின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு வருகின்ற 23ம் தேதி ஏஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

Vijay: அரசியல்வாதியாக முதல் செய்தியாளர் சந்திப்பு; மதுரை மக்கள் பற்றி விஜய் என்ன பேசினார்?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article