Vyjayanthimala: வைஜெயந்திமாலாவுக்கு என்னாச்சு? - வைரலாகும் செய்தி உண்மையா?

9 months ago 9
ARTICLE AD BOX

1949-ம் ஆண்டு 'வாழ்க்கை' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் வைஜயந்திமாலா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். பிமல் ராயின் தேவதாஸ் (1955) திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்ததற்காகத் தேசிய அளவில் புகழ் பெற்றார். அவரின் நடிப்பு 'சிறந்த துணை நடிகை'-க்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. இருப்பினும், அவர் `என் கதாப்பத்திரத்தைத் துணை நடிகையாகக் கருதவில்லை' என்று கூறி, அந்த விருதை நிராகரித்தார்.

Vyjayanthimala

நடிகர் ராஜ் கபூரின் குடும்ப மருத்துவர் மருத்துவர் சமன்லால் பாலி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, சினிமா துறையிலிருந்து விலகினார். 1984 ஆம் ஆண்டில், அவர் இந்தியத் தேசிய காங்கிரஸிலும், 1999-ல் பாஜகவிலும் இணைந்தார். 1968-ல் பத்மஸ்ரீ விருதும், 2024-ல் பத்மவிபூஷன் விருதும் வழங்கப்பெற்றார். இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வைரலானது.

இந்த செய்தி குறித்து சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் கிரிஜாசங்கர் சுந்தரேசன் தனது இன்ஸ்டாகிராமில், ``மருத்துவர் வைஜயந்திமாலா பாலி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் குறித்து வரும் வேறுவிதமான எந்த செய்தியும் உண்மையல்ல. செய்திகளைப் பகிர்வதற்கு முன் செய்தியைச் சரிபாருங்கள். ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதே பதிவை வைஜயந்திமாலாவின் மகன் சுசீந்திர பாலியின் மனைவி நந்தினி பாலி அவரின் சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article