ARTICLE AD BOX
அஸ்திரம் (தமிழ்)
அஸ்திரம்வெகுநாள்களுக்குப் பிறகு நடிகர் ஷியாம் தமிழில் நாயகனாக நடிக்கும் திரைப்படமான இது. தொடர் கொலைகளும் அதனை துப்பறியும் காவல் அதிகாரியும் என கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நேற்று (மார்ச் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
டிராமா (தமிழ்)
டிராமாஆன்தாலஜி பாணியிலான க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள 'டிராமா' திரைப்படத்தில் நடிகர்கள் விவேக் பிரசன்னா, சாந்தினி, ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (மார்ச் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
PELLI KANI PRASAD (தெலுங்கு)
PELLI KANI PRASADகுடும்ப வழக்கத்திற்கும் தந்தையின் பேராசைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் நடுத்தர வர்க்கத்து ஆணின் கதையில் உருவாகி இருக்கும் தெலுங்கு காமெடி திரைப்படமான இதில் பிரபல தெலுங்கு காமெடியன் சப்தகிரி நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று (மார்ச் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
TUMKO MERI KASAM (இந்தி)
TUMKO MERI KASAMஅடா சர்மா மற்றும் அனுபம் கர் நடிப்பில் உருவாகி இருக்கும் எமோஷனல் குடும்பத் திரைப்படமான இது நேற்று (மார்ச் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
SNOW WHITE (ஆங்கிலம்)
டிஸ்னி தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ஸ்நோ வொயிட், தற்போது லைவ் ஆக்ஷனில் வெளியாகியுள்ளது. ரேச்சல் ஜெக்லர் (RACHEL ZEGLER) ஸ்னோ வொய்ட் ஆக நடித்துள்ள திரைப்படத்தில் கால் காடட்(GAL GADOT) வில்லியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
LOCKED (ஆங்கிலம்)
LOCKEDகாரைத் திருடும்போது அதன் உள்ளே மாட்டிக்கொள்ளும் திருடனின் போராட்டம் தான் இந்த LOCKED. ஆங்கிலத் திரைப்படமான இது நேற்று (மார்ச் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
டிராகன் (தமிழ்)
டிராகன்பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஷ்கின், கௌதம் மேனன், கே எஸ் ரவிக்குமார், வி ஜே சித்து ஆகியோரது நடிப்பில் உருவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றத் திரைப்படம் தான் டிராகன். அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்த திரைப்படம், ஒருவன் வாழ்க்கையில் செய்த தவறில் இருந்து தப்பிக்க முடியாது என்ற நெறியை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (தமிழ்)
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - சினிமா நடிகர் தனுஷின் இயக்கத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தற்கால காதலை மையமாக வைத்து உருவான இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
பேபி அன்ட் பேபி (தமிழ்)
பேபி அன்ட் பேபிநடிகர்கள் ஜெய், யோகி பாபு, பிரக்யானகரா ,சத்யராஜ், இளவரசு ஆகியோரது நடிப்பில் உருவாகி இருக்கும் பேபி அன்ட் பேபி திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது.
BRAHMA ANANDAM (தெலுங்கு)
BRAHMA ANANDAMபிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான BRAHMA ANANDAM ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
OFFICER ON DUTY (மலையாளம்)
Officer on Dutyமலையாள நடிகர் குஞ்சாகோ போபன் மற்றும் பிரியாமணி ஆகியோரின் நடிப்பில் க்ரைம் ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படமான இது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
ANORA (ஆங்கிலம்)
ANORAபுரூக்லினை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பொழுது சிண்ட்ரெல்லா கதையை படிக்கிறாள். அதே நேரம் அந்த செய்தி ரஷ்யாவை சென்றடைகிறது. அதன் பின் விளைவுகள் தான் அனோரா திரைப்படம். இத்திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.மேலும் இந்த திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
THE OUTRUN (ஆங்கிலம்)
THE OUTRUNரோனா தன் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக தான் வளர்ந்த ஸ்காட்லாந்த் தீவுகளின் காடுகளுக்கு திரும்பி வாழ்வதுதான் இத்திரைப்படத்தின் கதை. திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
THE ROOM NEXT DOOR (ஆங்கிலம்)
THE ROOM NEXT DOOR வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொள்ளும் இரு தோழிகளின் கதை தான் 'THE ROOM NEXT DOOR'. இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.
KHAKEE: THE BENGAL CHAPTER (இந்தி)

நேர்மையான காவல் அதிகாரியின் மரணம், அதன் பின் இருக்கும் ரவுடிகள் மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் என ஏழு எபிசோடுகளில் விவரித்து செல்கிறது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த க்ரைம் தொடர்.

9 months ago
8






English (US) ·