ARTICLE AD BOX
Good Bad Ugly (தமிழ், தெலுங்கு, இந்தி)
Good Bad Ugly'மார்க் ஆண்டனி' படத்தை இயக்கி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'Good Bad Ugly'. சிம்ரன், த்ரிஷா, பிரபு, யோகி பாபு, அர்ஜுன் தாஸ், சுனி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். அஜித் ரசிகர்களுக்கென பல கெட்டப்களில், பக்காவான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Alappuzha Gymkhana (மலையாளம், தமிழ்)
Alappuzha Gymkhanaகாலித் ரஹ்மான் இயக்கத்தில் நாஸ்லன் கஃபூர், லுக்மான், பேபி ஜீன், கணபதி, சந்தீப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Alappuzha Gymkhana'. குத்துச் சண்டையில் சாதிக்க துடிக்கும் நண்பர்களின் காதல், குச்சுச் சண்டை, வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Jack (தெலுங்கு)
பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் சித்து, வைஷ்ணவி சைத்தன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Jack'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Akkada Ammayi Ikkada Abbayi (தெலுங்கு)
Akkada Ammayi Ikkada Abbayiநிதின் பாரத் இயக்கத்தில் பிரதீப், தீபிகா பில்லி, வெண்ணிலா கிஷோர், முரளிதர், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'Akkada Ammayi Ikkada Abbayi'. காதல் ரொமாண்டிக் திரைப்படமான இது நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Jaat (இந்தி)

கோபி சந்த் இயக்கத்தில் சன்னி தியோல், ரந்தீப் ஹூடா, வினீத் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Jaat'. ஆக்ஷன் திரைப்படமான இது நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Maranamass (மலையாளம்)
Maranamassசிவபிரசாத் இயக்கத்தில் பாசில் ஜோசப், ராஜேஷ், சிஜு சன்னி, பாபு ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Maranamass'. ஆக்ஷன், காமெடி திரைப்படமான இது நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Bazooka (மலையாளம்)
தீனோ டென்னிஸ் இயக்கத்தில் மம்மூட்டி, கெளதம் வாசுதேவ் மேனன், ஐஸ்வர்யா, ஹக்கீம், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bazooka. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Akaal (இந்தி)
Akaalகிப்பி கிரிவெல் இயக்கத்தில் கர்பிரீட், நிம்ரட், நிகிதின் உள்ளிட்டோர் நடிபில் உருவாகியுள்ள திரைப்படம் 'Akaal'. 1840 காலக்கட்டத்தில் பஞ்சாப்பில் நடக்கும் வரலாற்று ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
The Amateur (ஆங்கிலம்)
The Amateurஜேம்ஸ் ஹவீஸ் இயக்கத்தில் ரமி மாலிக், லாரன்ஸ், ரக்கேல், மைக்கேல், ஜோன் பென்தல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Amateur'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Warfare (ஆங்கிலம்)
Warfareஅலெக்ஸ் கார்லேண்ட் இயக்கத்தில் ஜோசம் குயின், வில் பவுல்டர், கிட் கொன்னோர், ஃபின் பென்னிட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Warfare'. போர்களத்தில் நடக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Dog Man (ஆங்கிலம்)
Dog Manபீட்டர் ஹாஸ்டிங்ஸ் இயக்கத்தில் பிடே டாவிட்சன், லிட் ரெல் ஹொவ்ரே, இஸ்லா ஃபிஸ்ஸர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Dog Man'. ஆக்ஷன், அட்வன்சர், அனிமேஷன் திரைப்படமான இது வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.

8 months ago
8






English (US) ·