What to watch: `நாயகன்', `ஆரோமலே', `கிஸ்' - இந்த வாரம் வெளியாகியுள்ள சீரிஸ் மற்றும் படங்கள் லிஸ்ட்!

1 month ago 3
ARTICLE AD BOX

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்!

நாயகன்:

1987-ம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் `நாயகன்'. கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி இத்திரைப்படம் வியாழன் (நவம்பர் 6) அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ஆரோமலே:

நடிகர்கள் கிஷன் தாஸ், ஷிவத்மிகா, ஹர்ஷத் கான், VTV.கணேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் `ஆரோமலே'. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Aaromale MovieAaromale Movie

Others:

அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் நடிகைகள் கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

கிறிஸ்டினா கதிர்வேலன்:

நடிகர்கள் கௌஷிக் ராம், பிரதீபா ஆகியோரது நடிப்பில் அறிமுக இயக்குநர் SJN அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Innocent (மலையாளம்):

நடிகர்கள் அல்தஃப் சலீம், ஜெமோன் ஜ்யோதிர், அனார்கலி மரீக்கர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த காமெடி திரைப்படம் இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Ithiri Neram (மலையாளம்):

நடிகர் ரோஷன் மேத்யூ நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Innocent MovieInnocent Movie

Haq (இந்தி):

நடிகர்கள் யாமி கௌதம், இம்ரான் ஹஷ்மி ஆகியோரது நடிப்பில், உண்மை சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Predator: Badlands (ஆங்கிலம்):

உலகம் முழுவதும் பிரபலமான பிரிடேட்டர் திரைப்பட வரிசையில் மற்றுமொரு திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

நேரடி ஓடிடி வெளியீடுகள்:

Chiranjeeva (தெலுங்கு) - Aha:

நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன்டஸி திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) ஆஹா தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Bramulla (இந்தி)- Netflix:

காஷ்மீரில் தொடர்ந்து காணாமல் போகும் குழந்தைகளும், அதற்கு பின்னால் இருக்கும் மர்ம பின்னணியும் என த்ரில்லர் கதையில் உருவாகியுள்ளது நெட்ஃபிளிக்ஸின் பிரமுல்லா. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 7) வெளியாகி இருக்கிறது.

Chiranjeeva MovieChiranjeeva Movie

தியேட்டர் டூ ஓடிடி:

கிஸ் - Zee5 - November 7

Eka (கன்னடம்) - Sun Nxt - November 7

Mithra Mandali (தெலுங்கு) - Amazon Prime - November 7

Karam (மலையாளம்) - Manorama Max - November 7

Frankstein (ஆங்கிலம்) - Netflix - November 7

Fantastic Four: First Steps (ஆங்கிலம்) - Jio Hotstar - November 5

ஓடிடி தொடர்கள்:

First Copy Season 2 (இந்தி) - MX player - November 5

Maharani Season 4 (இந்தி) - Sonyliv - November 7

Thode Door Thode Pass (இந்தி) - Zee5 - November 7

Maxton Hall Season 2 (ஆங்கிலம்) - Amazon Prime - November 7

All's Fair (ஆங்கிலம்) - Jio Hotstar - November 4

My Sister's Husband (ஆங்கிலம்) - Netflix - November 3

Kamal Haasan: ரீ ரிலீஸுக்கு தயாராகும் கமலின் கல்ட் க்ளாசிக்ஸ் - என்னென்ன படங்கள் தெரியுமா?
Read Entire Article