ARTICLE AD BOX
அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு தொடங்கியிருக்கிறது.
இப்படத்தை தேவி சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
யோகி பாபுஇத்திரைப்படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய காதல் கதையைக் கொண்டது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள்.
'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்தில் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இத்திரைப்படம் உருவாகிறது.
இதுவரை பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகிபாபு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் மூலம் அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார்.
யோகி பாபுவின் புதிய திரைப்படம்இதுமட்டுமின்றி, இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 'மேற்கு தொடர்ச்சி மலை' படைப்பின் மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்த லெனின் பாரதி இப்படத்தின் மூலம் நடிகராகிறார்.
காளி வெங்கட், 'அயலி' மதன், பாவா லக்ஷ்மன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறன்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
8 months ago
8






English (US) ·