ARTICLE AD BOX
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள இத்திரைப்படம், நடிகர் அஜித் குமாரின் 63-வது திரைப்படம் ஆகும். அதேநேரம் இயக்குனர் ஆதிக்-க்கு 5-வது திரைப்படம் ஆகும்!
நடிகர் அஜித் திரைப்படங்களுக்கு சமீப காலமாக தமிழில் பெயர் சூட்டப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின் - Red (2002) திரைப்படத்திற்கு பின் - தற்போது இத்திரைப்படம் ஆங்கிலத்தில் பெயர் பெற்றுள்ளது.
தகவல்கள் படி இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும்; இரு வேறு பாத்திரத்தின் தேவைக்காக தனது எடையை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜி (2005), கிரீடம் (2007), மங்காத்தா (2011), என்னை அறிந்தால் (2015), விடாமுயற்சி (2025) திரைப்படங்களுக்கு பின்னர் தற்போது இந்த GOOD BAD UGLY திரைப்படத்தில் 6-வது முறையாக நடிகை திரிஷாவுடன் இணைந்து நடிக்கிறார் அஜித்!
தகவல்கள் படி இத்திரைப்படத்தில் சிம்ரன் சிறப்பு பாத்திரத்தில் தோன்றுகிறார். இறுதியாக அவர் உன்னை கொடு என்னை தருவேன் (2000) திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திரிஷா இல்லனா நயன்தாரா (2015), மார்க் ஆண்டனி (2023) திரைப்படத்திற்கு முன் 3-வது முறையாக, இயக்குனர் ஆதிகுடன் இணைகிறார் GV பிரகாஷ். அதேநேரம், கிரீடம் (2007) திரைப்படத்திற்கு நடிகர் அஜித் குமாருடன் 2-வது முறையாக இணைகிறார்!
ஏப்ரல் 10, 2025 அன்று வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ் மொழியை தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் என மொத்தம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிரபல இணையத் தொடரான Money Heist தொடரில் இடம்பெற்ற இடங்கள் பல, இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thanks For Reading!







English (US) ·