ARTICLE AD BOX
நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றிருக்கிறது.
Ajith Kumar Racingஇந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது.
3ஆம் இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் அணி இந்த மாதம் இரண்டு, அடுத்த மாதம் இரண்டு என 4 போட்டிகளில் பங்கேற்கிறது.
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தை அஜித்குமார் அணி பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2 months ago
4





English (US) ·